tamilnadu

img

மறைந்த மூத்த தலைவர் ஜி.மணிக்கு தலைவர்கள் அஞ்சலி.....

திருவள்ளூர்;
அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின்முன்னாள் மாநிலப்பொதுச் செயலாளர் தோழர் ஜி.மணி ஜூன் 5 சனிக்கிழமையன்று இரவு காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் மற்றும் தோழர்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தோழர் ஜி.மணி மறைவுச்செய்தி அறிந்து மருத்துவமனைக்கு சென்ற கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தோழர் ஜி.மணியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம் (தென்சென்னை), கோபால் (திருவள்ளூர்), வடசென்னை மாவட் டச் செயற்குழு உறுப்பினர் வி.ஜானகிராமன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் எஸ்.சரவணசெல்வி (தென் சென்னை), பி.சுந்தரம் (மத்தியசென்னை) உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, தோழர் மணியின் உடல் பொன்னேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு  கட்சித்தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர் கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது.தோழர் ஜி.மணியின் உடலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், ப.சுந்தர்ராஜன், வி.குமார், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், டி.பன்னீர் செல்வம், கே.விஜயன், ஏ.ஜி.கண்ணன், பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், ஏ.ஜி.சந்தானம்,  பொன்னேரி பகுதி செயலாளர் இ.தவமணி, கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மீஞ்சூர் ஒன்றியச் செயலாளர் ரமேஷ் குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.தமிழ்அரசு, எஸ்.எம்.அனீப்,சி.பாலாஜி, ஜி.சூரியபிரகாஷ், ஜெ.ராபர்ட் எபிநேசர், ஜி.வினாயகமூர்த்தி ,பொன்னேரி பகுதிக்குழு உறுப்பினர்கள் பாலு, காளமேகம், மதன்,சேகர், நாகராஜ், ஜெயவேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.மதன்,  இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வசந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங் கம், மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன், பொருளாளர் எம்.கருணா, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.மோசஸ் பிரபு உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.பிறகு தோழர் ஜி.மணியின் உடல் பொன்னேரி ரயில்நிலையம் அருகில் உள்ள சக்தி நகரில் பேரூராட்சி இடுகாட்டில் அடக்கம் செய்யப் பட்டது.

                            ****************

படக்குறிப்பு : 

1.தோழர் ஜி.மணி உடலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்கள் ப.சுந்தரராஜன், எஸ்.கண்ணன் மற்றும் திருவள்ளூர் மாவட்டக் குழு சார்பில் அஞ்சலி

2. தோழர் ஜி.மணி உடலுக்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில பொருளாளர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் அஞ்சலி.

3. தோழர் ஜி.மணி மறைவிற்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டக்குழு சார்பில் சமயநல்லூரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர்,  மதுரை மாவட்டத் தலைவர் வி.உமாமகேஸ்வரன், மாவட்டச் செயலாளர் சொ.பாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் து.ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.