சென்னை, மார்ச் 7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் என்.கேசவன் திங்களன்று (மார்ச் 6) காலமானார். இவர் 1967ஆம் ஆண்டு ஓட்டல் தொழி லாளியாக இருந்த போது சிஐடியு சங்கத்தில் இணைந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைத்துக் கொண்டு ஓட்டல் தொழிலாளர்களை திரட்டினார். பின்னர் பின்னி ஆலையில் பணி கிடைத்தது. அங்குள்ள கட்சிக் கிளையில் தன்னை இணைத்துக் கொண்டு ஆலைத் தொழிலாளர்களை திரட்டினார். கட்சி மற்றும் வெகுஜன ஸ்தாபனங்கள் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறா மல் பங்கேற்றார். தன்னுடைய தள்ளாத வயதிலும் அம்பத்தூர் பகுதி மாநாட்டில் பங்கேற்றார். அவர் இறுதிகாலம் வரை கட்சி உறுப்பினராக இருந்து மறைந்தார். அவரது உடலுக்கு கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பி னர்கள் டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்தி ரன், எஸ்.கார்த்தீஷ் குமார், மா.பூபாலன், இரா.முரளி (மத்திய சென்னை), மாவட்டக் குழு உறுப்பினர்கள் அ.ஜான், கமலநாதன், ஆர்.கோபி, சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, ஆர்.ரவிக்குமார் (மின் ஊழியர் மத்திய அமைப்பு), சி.கல்யாண சுந்தரம் (தீக்கதிர்), சண்முகம் (தீக்கதிர் விநியோகம்), கே.கிருஷ்ண சாமி (சாடியா), ஏ.ராயப்பன், சு.பால்சாமி (மோட்டார் வாகனம்), நிர்வாகிகள் சீனிவாசன், என்.கணேசன், இ.பாக்கியம், வீரன், அமர்நாத், பொன்னுசாமி, ராபர்ட் ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் செவ்வாயன்று (மார்ச் 7) அம்பத்தூர் டன்லப் அருகே உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.