சென்னை, ஏப். 13 - வடசென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதி 70ஆவது வட்ட கிளைச் செயலாளராக செயல்பட்டவர் பி.அசோகன் (59). இவர் 1983ஆம் ஆண்டு தன்னை வாலிபர் சங்கத்தில் இணைத்துக் கொண்டு செயல்பட துவங்கியவர், பின்னர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டு இறுதிமூச்சு வரை மக்கள் பணியாற்றினார். கொரோனா காலத்தில் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்தார். கவுத புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்தவர்க ளுக்கு மீண்டும் இலவசமாக வீடு வழங்க வேண்டும் என்ற போராட்டத்தில் முன் நின்றவர். இந்நிலையில் இவர் கேரள மாநிலம் கண்ணூரில் ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு இறுதி நாள் பேரணி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட னர். பேரணி, பொதுக்கூட்டம் முடிந்து அவர் தங்கியிருந்த அறைக்கு சென்ற அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இதையடுத்து அவரது உடல் புதனன்று காலை அங்கிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டு, சென்னை பெரம்பூர் மடுமா நகர் சின்னக் குழந்தை தெரு வில் உள்ள அவரது இல்லத் தில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. அவரது உடலுக்கு கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பி னர் ப.செல்வசிங், கே.சாமு வேல்ராஜ், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், வடசென்னை மாவட்டச் செய லாளர் எல்.சுந்தர்ராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.கே.சண்முகம், அ.விஜயகுமார், எஸ்.ராணி, ஆர்.ஜெயராமன், மாவட்டக் குழு உறுப்பினர் ராஜ்குமார், வி.குப்புசாமி, கொளத்தூர் பகுதிச் செய லாளர் பா.ஹேமாவதி உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் புதனன்று மாலை 4 மணிய ளவில் திருவிக நகரில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப் பட்டது.