tamilnadu

சரக்கு வாகனம் மோதி  ஒருவர் பலி

தேனி:
ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(50) எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார்.  இவர் தனது இருசக்கரவாகனத்தில் டி.புதூர் பகுதியில் எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக சென்ற சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த மனோகரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் இந்த விபத்தில் அங்கு நின்றிருந்த காசிமாயன், அவரது பேத்தி தர்ணிகா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து  விரைந்து சென்ற ஆண்டிபட்டி காவல்துறையினர் காயமடைந்த இருவரையும் மீட்டு தேனிஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர்  விபத்து ஏற்படுத்தியசரக்கு வாகன ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.