tamilnadu

கம்பம் அருகே வேன் மோதி கணவன்-மனைவி பலி

தேனி,மே 24- தேனி மாவட்டம் வருஷநாடு, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வாசகர், இவர் கட்டடத் தொழிலாளியாக வேலைசெய்து வந்தார். இவரது மனைவி  அமுதா. இவர்கள் இருவரும் ஞாயிறன்று தேனி அருகே உள்ள சிந்தலைச்சேரி கிராமத்திற்கு தனது இருசக்கர வாக னத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும்  வருஷநாடு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கட மலைக்குண்டு அருகே உள்ள அய்யனார்கோவில் பகுதியில் சென்ற போது எதிரே தக்காளி ஏற்றிக் கொண்டு வந்த வேன் எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம்  மீது மோதியது. இந்த விபத்தில் வாசகர், அமுதா இருவரும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்த னர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற   காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடமலைக்குண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.