tamilnadu

தாராபுரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி ஒருவர் பலி

தாராபுரம், ஜூன் 23- தாராபுரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். தாராபுரம் ராமபட்டிணம் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மூர்த்தி (36). இவர் வேலை  முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டி ருந்தார். அப்போது தாராபுரம் பழனிரோடு உப்புத்துறைபாளையம் தனியார் திருமண  மண்டபம் அருகே வரும் போது வேதாரண் யத்தில் இருந்து கோழிவண்டி தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த  வேன் கட்டுப் பாட்டை இழந்து மூர்த்தியின் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார். இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.