தேனி, மே 21- மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து கடந்த மே 19-ஆம் தேதி தேனி மாவட்டத்திற்கு வந்த, பாலக்கோம்பையைச் சேர்ந்த வேலுச்சாமி (45) ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமை படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டி ருந்தார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இந்த நிலை யில், முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த வேலுச்சாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவர் முதலுதவி சிகிச்சைக்குப்பின் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயி ரிழந்தார். வேலுச்சாமி இறப்பிற்கு சம்ப வத்தின்போது பணியில் மருத்துவர் இல்லா ததே காரணம் எனக்கூறப்படுகிறது.
போடி அரசு பொறியியல் கல்லூரியில் கடந்த 17-ஆம் தேதி வாலிபர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பணியில் மருத்துவர் இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. தனிமைபடுத்தப்பட்ட முகாம்களில் உள்ளவர்களுக்கு மன நல மருத்துவர் உதவி யுடன் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். சொந்த ஊருக்கு வந்த பின்னரும் கடுமை யான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பொழுதுபோக்குடன், சத் தான உணவு வழங்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. மாவட்ட நிர்வாகத்தில் கட்டுப்பாட்டில் உள்ள முகாமில் இறந்த வர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்வ தோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.