tamilnadu

சங்கரன்கோவில் அருகே பட்டாசு ஆலை தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி மேலாளர் கைது

தென்காசி, மார்ச் 7- சங்கரன்கோவில் அருகே பட்டாசு ஆலை தீ  விபத்தில் மேலும் ஒருவர் பலி யான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படு த்தியுள்ளது. தென்காசி மாவட்டம் திரு வேங்கடம் அருகே குளக்க ட்டாகுறிச்சி மேலப்பட்டி ரோடு பகுதியில் தனியா ருக்கு சொந்தமான பட்டாசு  ஆலை உள்ளது. இதனை  விருதுநகர் மாவட்டம் சிவ காசியைச் சேர்ந்த செல்வ ராஜ் நடத்தி வருகிறார். தொ ழிற்சாலையில் உள்ள 8 அறைகளில் பட்டாசுகள் தயா ரிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் 39 தொழி லாளர்கள் ஈடுபட்டு வந்தனர். வெள்ளியன்று காலை வழக்கம் போல் தொழிலா ளர்கள் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றனர். அங்குள்ள 3-வது அறை யில் தரைசக்கர பட்டாசு தயா ரிக்கும் பணியில் தொழிலா ளர்கள் ஈடுபட்டனர். இந்த பணியில் திருவேங்கடம் அருகே உள்ள சீவகம்பட்டி என்ற சுந்தரேசபுரத்தைச் சேர்ந்த கணபதிசாமி மகன் சேவுகபாண்டியன் (31), சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் மாரி யப்பன் (38) ஆகிய 2 பேரும் ஈடுபட்டனர்.  அவர்கள் வெடிம ருந்தினை பட்டாசுக்குள் அடைக்கும் பணியில் ஈடு பட்ட போது, அந்த அறையில்  வெடி மருந்தில் ஏற்பட்ட உரா ய்வு காரணமாக திடீரென்று தீப்பிடித்தது. இதனால் அந்த அறையில் இருந்த வெடி மருந்து, தரைச் சச்கர பட்டாசு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. கண்ணிமைக்கும் நேர த்தில் நிகழ்ந்த இந்த தீ விப த்தில் அந்த அறைக்குள் சிக்கி  கொண்ட சேவுகபாண்டியன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். படுகா யம் அடைந்த மாரியப்பன் உயிருக்கு ஆபத்தான நிலை யில் மீட்டு நெல்லை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டது. இதுகுறித்து தகவல்  அறிந்ததும் சங்கரன்கோ வில், கழுகுமலை, வெம்ப க்கோட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வா கனங்களில் வீரர்கள் விரைந்து சென்று, சுமார் ஒரு  மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையை சங்கரன்கோவில் டி.எஸ் .பி. பாலசுந்தரம், திருவேங்க டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) சுப்பிரமணியன், நெல்லை மாவட்ட தீயணை ப்பு அலுவலர் மகாலிங்க மூர்த்தி, விருதுநகர் மாவட்ட  தீயணைப்பு உதவி அலுவ லர் முத்துபாண்டி, திருவே ங்கடம் தாசில்தார் சுப்பிர மணியன் மற்றும் அதி காரிகள் பார்வையிட்டனர். மேலும் சேவுகபாண்டியனின் உடல் பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மரு த்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நடுவப்பட்டி  கிராம நிர்வாக அலுவலர், அபாயகரமான பட்டாசுகளை அஜாக்கிரதையாக வைத்தி ருந்தாக பட்டாசு ஆலை உரி மையாளர் செல்வராஜ் மற்றும் தொழிற்சாலை மேலா ளர் மாரிச்சாமி (37) ஆகி யோர் மீது திருவேங்கடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து மாரிச்சாமியை கைது செய்தனர். மேலும் தலைம றைவாக உள்ள உரிமையா ளர் செல்வராஜை தேடி வரு கின்றனர். இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  மாரியப்பனும்  வெள்ளிக்கி ழமை நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரி ழந்தார். தீ விபத்தில் இறந்த சேவுகபாண்டியனுக்கு ஜெயா என்ற மனைவியும், ரமேஷ் (8), ஆகாஷ் (5) ஆகிய 2 மகன்களும் உள்ள னர். மாரியப்பனுக்கு மாரிய ம்மாள் என்ற மனைவியும், அக்‌‌ஷயா (15), கிருஷ்ண வேணி (13) ஆகிய 2 மகள்க ளும் உள்ளனர்.