tamilnadu

நெய்வேலி பாய்லர் விபத்து: மேலும் ஒருவர் பலி

கடலூர், ஆக. 4- கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடந்த 1ஆம் தேதி  இரண்டாவது  அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில்   பலி  எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. கடந்த 1ம் தேதி பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில்  5 பேர் பலியாகினர்.  17 பேர் தீக்காயத்துடன் சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.  இவர்களில் படிப்படியாக மருத்துவமனையில் சிகிச்சை பலன ளிக்காமல் மொத்தம் 14 பேர் வரை உயிரிழந்த நிலையில் அப்பல்லோ  மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வந்த பொறியாளர் கே. ரவிச்சந்திரன் சிகிக்சை பலன் இன்றி செவ்வாய் கிழமை மதியம்  2.40 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையடுத்து பலியான வர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.