tamilnadu

தமிழ்ப் பல்கலை.யில்  உலக நாட்டுப்புறவியல் நாள் கருத்தரங்கம்

 தஞ்சாவூர், ஆக.23- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நாட்டுப்புற வியல் துறை சார்பில் சனிக்கிழமை உலக நாட்டுப்புறவியல் நாளை முன்னிட்டு இணையவழியில் உரைநிகழ்வு நடை பெற்றது.   தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ.பாலசுப்ர மணியன் தலைமை வகித்துப் பேசுகையில், “தமிழ்ப் பல்க லைக்கழகம் நாட்டுப்புற ஆய்வில் முனைப்பாக ஈடுபட்டு வந்துள்ளது. நாட்டுப்புற ஆய்வுகள் இலக்கியம், வரலாறு போன்ற பிறதுறை ஆய்வுகளுக்கும் மிகவும் தேவையா கின்றன. நாட்டுப்புற இலக்கியங்களும், நாட்டுப்புற கலைக ளும் மதித்துப் போற்றப்பட வேண்டும். உலகெங்கிலும் நாட்டு ப்புறப் பண்பாடு போற்றி வளர்க்கப்படுகிறது. தமிழ்ச் சூழலில் திரைப்படங்களில் நாட்டுப்புறக் கலையும், கலைஞர்களும் தேவை கருதிப் பயன்படுத்தப்படுகின்றனர். நாட்டுப்புற மக்களின் வழக்காறுகள் மக்கள் மத்தியில் பரவ லான புழக்கத்தில் இருக்க வழிவகைகளை உருவாக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை யில் ஊர்தோறும் நாட்டுப்புற கலை, இலக்கிய மன்றம்  அல்லது தமிழ் மரபு மன்றம் எனும் வகையில் அமைப்பு களை உருவாக்கலாம்” என்றார். நாட்டுப்புறவியல் அறிஞர் ஆறு.இராமநாதன் ‘நாட்டுப்பு றவியலில் செய்ததும் செய்ய வேண்டியதும்’ என்ற தலை ப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், தமிழி கலைக்களம்  சார்பில் நாட்டுப்புற இசை நடைபெற்றது. ஆரல் விக்டர் நாட்டு ப்புறப் பாடலை வழங்கினார்.  நிகழ்வில் நாட்டுப்புற ஆய்வா ளர்கள், கலைஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்