திருவண்ணாமலை, மார்ச் 15- திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் மேலாண்மை யில் துறையின் சார்பில்‘ வேலை வாய்ப்பு-பயன்கள்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்விக்குழுமத்தின் தலைவர் கு.கருணாநிதி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் கே.வி. அரங்கசாமி, முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் ஆர்.சக்திகிருஷ்ணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாணவர் மெல்வின் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். பாஸ்கரன், துறை தலைவர் முனைவர். கார்த்தி கேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் இந்நிகழ்ச்சியில், இந்தியன் கம்பெனி செகரட்டரி ஷிப் மேலாளர் ஜனனி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.