தஞ்சாவூர், ஜன.5- தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில் வணிக மேலாண் மைத்துறை சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மா.விஜயா, துணைமுதல்வர் முனை வர் ரா.தங்கராஜ் வாழ்த்திப் பேசினர். சென்னை பார்லே அக்ரோ நிறுவனத்தின் துணை பொது மேலாளர் முனைவர் ச.ராமகிருஷ்ணன், கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.