மயிலாடுதுறை, மார்ச்.25- மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் கலைமகள் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மயிலாடுதுறை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆர்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. கலைமகள் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு வரவேற்று பேசினார். வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், மோட்டார் வாகனஆய்வாளர் (நிலை1) ராம்குமார், சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் (நிலை-1)விஸ்வநாதன் ஆகியோர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விரிவாக உரையாற்றினர். மாவட்ட ரோட்டரி அறக்கட்டளை தலைவர் இராமன், நிர்வாகிகள் முருகேசன், கணேஷ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். திட்ட இயக்குநர் இளங்கோவன் நன்றி கூறினார். கருத்தரங்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.