tamilnadu

img

தீயணைப்பு துறை சார்பில்  பள்ளிகளில் மரக்கன்று நடும் விழா

 தஞ்சாவூர், ஜூன் 11- பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். நிலைய அலுவலர் செந்தூர் பாண்டியன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.  இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை முன்னிலை வகித்தார். குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின் ஸ்ரீதர், பள்ளி அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், நபிஷாபேகம், ஆசிரியர்கள் கவின், பிரபாகரன் கலந்து கொண்டனர். இதே போல் செங்கமங்கலம் அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் வழக்கறிஞர் சாமியப்பன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பள்ளியின் மேலாளர் நடராஜன், நிலைய எழுத்தர் சரவணமூர்த்தி, தீயணைப்பு வீரர்கள் அருண், பிரபாகரன் கலந்து கொண்டனர்.