அவிநாசி, ஆக.18- அவிநாசி பேரூராட்சியில் ரிசர்வ் சைட் பகுதி களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அவிநாசி பேரூராட்சி சார்பில் மகாநகர், ஜெய் சக்தி அவின்யு, சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் வேம்பு,தடசு,அளிஞ்சில், மந்தாரை, கருங்காலி, தனுக்கு ,வாகை,உசில், வெப் பாலை, விலாம் பழம் உள்ளிட்ட 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. சங்க மாங்குளம் பகுதியில் 1200 பனை விதைகள் நடப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்ட பேரூராட்சி உதவிப் பொறியாளர் மனோகரன், செயல் அலுவலர் ஈஸ்வரன், பேரூராட்சி அதிகாரி கருப்புசாமி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.