tamilnadu

நூறு நாள் வேலையில் கூலியை உயர்த்தி வழங்க அதிகாரிகள் உறுதி போராட்டம் கைவிடப்பட்டது

தஞ்சாவூர், ஜூலை 14 - தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் செங்கிப்பட்டி சரகம் செங்கிப்பட்டி கிரா மத்தில் கொரோனா நோய் கோரத்தாண்டவம் ஆடி உயிரை பறிக்கும் நேரத்தில், நூறு நாள்  வேலை செய்த செங்கிப்பட்டி ஊராட்சி தொழி லாளர்களுக்கு சட்டக் கூலி ரூ.253 வழங்கா மல், நாள் ஒன்றுக்கு ரூ.150 வழங்கியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளைச் செயலாளர்கள் ஜே.சந்திர போஸ், ஏ.ஜி.தங்கவேல் தலைமையில் செவ்வாய்க்கிழமை செங்கிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இதுதொடர்பாக ஜூலை 13 அன்று மாலை  4 மணிக்கு பூதலூர் வட்டாட்சியர் அலுவல கத்தில், வட்டாட்சியர் தலைமையில் சமா தான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றியம், கிளைச் செயலாளர்கள், சிபிஎம், மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், “தொழிலாளர்கள் குடி யிருக்கும் பஞ்சாயத்தில் 100 நாள் வேலை பணி வழங்கப்படும் என்றும், குறைந்தபட்சம் ரூ.  200 ஊதியம் வழங்குவதாகவும், தொழிலா ளர்கள் பணி செய்வதை ஆய்வு செய்து தகுதி யின் அடிப்படையில் ஊதியத்தை உயர்த்தி  வழங்கப்படும் என்றும்,  குறைந்தபட்சம் மாதம் 15 நாட்கள் ஒருவருக்கு வேலை வழங்குவ தற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும், பூதலூர்  வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர் ஆகியோர் தெரிவித்ததை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த முற்றுகைப் போராட்டம் தற்காலிக மாக விலக்கிக் கொள்ளப்பட்டது.