tamilnadu

img

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வங்கிக் கணக்கை திரும்பப் பெறும் போராட்டம்

கும்பகோணம், மார்ச் - மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கும்ப கோணம் அருகே சோழபுரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து சேமிப்பு மற்றும் வைப்புத் தொகைகளை திரும்பப் பெறும் நூதன போராட்டத்தில் இஸ்லாமி யர்கள் ஈடுபட்டனர். சோழபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளில் இருந்து தங்கள் சேமிப்புத் தொகை மற்றும் வைப்புத் தொகையை திரும்பப் பெற பெண்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. பலர் தங்கள் வங்கிக் கணக்குக ளை முடித்துக் கொண்டனர். இதன் மூலம் சுமார் 10 லட்ச ரூபாய் வங்கியிலிருந்து திருப்பப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் வங்கிகளின் நுழைவு வாயிலில் நின்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்ட னர். இதே போன்று போராட்டங்கள், மற்ற வங்கிகள் முன்பும் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.