தஞ்சாவூர், ஜூலை 30- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டையில் மாட்டு வண்டி தொழிலா ளர்களுக்கு என தனியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால் தலைமை வகித்தார். முறை சாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வம், ஒன்றி யச் செயலாளர் எஸ்.கந்தசாமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்பிர மணியன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.வீரையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஏ. கோவிந்தசாமி, மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் அதி ராம்பட்டினம் சோமசுந்தரம், பட்டுக் கோட்டை பழனி, ரமேஷ் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி- ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை அரசுப் போக்கு வரத்துக் கழக பணிமனையில், ஆயி ரக்கணக்கான மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்ட பேரணி தொடங்கி, சுமார் 2 கிமீ தூரம் சென்று, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், “மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தும் வகையில், தனியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டும். லாரி, டாரஸ், டிப்பர் லாரிகளில் இயந்தி ரங்களை பயன்படுத்தி மணல் கொள்ளை நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மணல் மாட்டு வண்டி தொழி லாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலி யுறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிஐடியு நிர்வாகிகள் தலைமையில் சார் ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.