தஞ்சாவூர் ஆக.5- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் மணல் மாட்டு வண்டித் தொழிலா ளர்களுக்கு கொள்ளிடம் ஆற்றில் தனியாக மணல் குவாரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மணல் மாட்டுவண்டித் தொழிலாளர் சங்கம் சார்பில் திங்கட்கிழமை பேரணி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பூதலூர் நாலுரோட்டில் தொடங்கிய பேரணி, வட்டாட்சி யர் அலுவலகத்தில் நிறைவடைந் தது. பின்னர் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்து பேசுகையில், “பூதலூர் காவல்நிலையத்தில், மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு களை ரத்து செய்ய வேண்டும். மணல் மாட்டு வண்டி தொழிலாளர் களை, அடித்தல், உபகரணங்களை பறிமுதல் செய்தல், கைது செய்தல் சிறைக்கு அனுப்புதல், துன்புறுத்து தல் போன்ற நடவடிக்கைகளை காவல்துறை கைவிட வேண்டும். சட்டவிரோதமான முறையில் கனரக வாகனங்கள் மூலம் மணல் மாபியாக்கள் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர். இவர்களை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் வாழ்வா தாரத்தை காப்பதற்காக மணல் மாட்டு வண்டி தொழிலாளர் களுக்கு, அரசு தனியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டும்” என்றார். ஆர்ப்பாட்டத்தில் முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், சிஐடியு மாவட்ட துணைச் செய லாளர் கே.அன்பு, சா.செங்குட்டு வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், பூதலூர் வடக்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.காந்தி, தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. பாஸ்கர், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் ஆகியோர் பேசி னர். சிஐடியு மாவட்டக் குழு உறுப்பி னர்கள் இ.முகம்மது சுல்தான், எஸ். விஜயகுமார், எம்.ஜி.சரவணன், மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பூதலூர் வடக்கு ஒன்றியத் தலைவர் ஆர்.அண்ணா துரை, செயலாளர் குமார், பொருளா ளர் கலியமூர்த்தி, பூதலூர் தெற்கு ஒன்றியத் தலைவர் இமானுவேல், செயலாளர் சந்திரசேகர், பொரு ளாளர் மோகன் குமார் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து பூதலூர் வட்டாட்சியர் சிவகுமாரை சிஐடியு நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கோரி க்கை மனுவைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், “கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் பணி நடந்து கொண்டிருப்பதாக வும், விரைவில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு வழங்க மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்யப்படும்” என உறுதி அளித் தார். இதையடுத்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டோர் கலைந்து சென்ற னர்.