tamilnadu

img

மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களை பாதுகாத்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.24- கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தீர்மானித்தப்படி மணல் மாட்டு வண்டி குவாரி திறக்க வேண்டும். திடீர், திடீரென மணல் மாட்டு வண்டி குவாரிகளை மூடுவதை கைவிட்டு தொழிலாளர்களையும், மாடுகளையும் பாதுகாக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட  மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க ஸ்ரீரங்கம் ஒன்றியம் சார்பில் சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மணல் மாட்டு வண்டி சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாநகர் மாவட்ட துணைத் தலைவர் வீரமுத்து, புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் வேளாங்கண்ணி, கிழக்கு பகுதி செயலாளர் சிவக்குமார், மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் ஜி.கே.ராமர், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் பேசினர். மேலூர் குமார், அய்யனார், ரெங்கி, விஜி, ஸ்ரீரங்கம் சிவா, முத்துகிருஷ்ணன், ஆனந்த், செக்போஸ்ட் வடமலை, குப்பு, கிருஷ்ணன் உள்பட 50-க்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.  இதே போன்று மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க அந்தநல்லூர் ஒன்றிய கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள் சார்பில் திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட பொருளாளர் வி.கே.ராஜேந்திரன், புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், சிபிஎம் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன், மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் ராமர், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் பேசினர்.