கும்பகோணம், ஆக.22- கும்பகோணம் ஒன்றியம் கொத்தங்குடி கிராமத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கொத் தங்குடி புது வாய்க்கால் அத்தியூர் வாய்க்கால் மூலம் 100க்கு மேற்பட்ட ஏக்கர் பாசனத்திற்கு பயன்பட்டு வரு கிறது. ஆனால் புது வாய்க்கால், அத்தியூர் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் தூர்வாரி 20 வருடங்களுக்கு மேல் ஆகி றது. இதனால் மன்னி ஆற்றில் தண்ணீர் வந்தால் மேற்கண்ட வாய்க்கால் மூலம் விவசாயத்திற்கு பாசனத்திற்கும் தண் ணீர் பயன்பாடு இல்லாமல் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் மழை வெள்ளக் காலத்தில் தண்ணீர் வடியாமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஆகவே திருப்புறம்பியம் ராமன் தெருவிலிருந்து பிரியும் அத்தியூர் வாய்க்காலை தூர்வாரி விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்நிகழ்வில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் சி.நாகராஜன் ஒன்றிய தலைவர் ஆர்.நாகமுத்து, கிளைச் செயலாளர் ரவி, வாலி பர் சங்க பொறுப்பாளர் அன்பரசு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மனுவை, கொத்தங்குடி கிராம நிர்வாக அலுவலர் அசாருதீன், வேளாண் உதவி அலுவலர் மணவாளன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.