districts

செங்கிப்பட்டி புதுக்குளத்தை  தூர்வாரக் கோரிக்கை

 தஞ்சாவூர், மே 22 -  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம், செங்கிப்பட்டி சிபிஎம் கிளைக் கூட்டம் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் ஒன்றியக்குழு கே.தமிழரசன், டி.தமிழ்ச்செல்வன், கிளைச் செயலாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், செங்கிப்பட்டி புதுக்குளத்தை தூர்வார வேண்டும். குடிமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.