tamilnadu

கும்பகோணம் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரக் கோரிக்கை

கும்பகோணம், ஜூன் 18-  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதி களில் அரைகுறையாக தூர்வாரப்பட்டு உள்ள வாய்க்கால்க ளை முழுமையாக தூர்வார கோரிக்கையும். தூர்வாரபடாத வாய்க்கால்களை தூர்வார கோரியும் கும்பகோணம் மேலக்காவேரி பொதுமக்கள் சார்பில் தமிழக அரசின் முதன்மை செயலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.   அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது, கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் காவேரி ஆறு வழியாக அசூர் பாசன வாய்க்கால்  சங்கமிக்கிறது. நாளடைவில் வாய்க்கால் பல இடங்களில் தூர்ந்து போய் விட்டது. வாய்க்காலை தூர்வாரி மீண்டும் தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரண்டு வருடமாக புகார் அளித்தும் இந்த  வாய்க்காலை மீட்கும் முயற்சி மட்டும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டு வந்தது.  இந்த வாய்க்காலை தூர்வாரினால் குளங்களில் நீரை சேமித்து கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். முன்பு நிலத்தடி நீர் சுமார் 40 அடி யில் கிடைத்தது. தற்போது சுமார் 300 அடி ஆழத்துக்கு ஆழ்குழாய் அமைத்தாலும் தண்ணீர் கிடைக்காத நிலைமை உள்ளது. தற்போது குடிநீருக்காக கேன் தண்ணீர் வாங்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் தற்போது அசூர் பாசன வாய்க்கால் முழுமையாக தூர்வாரப்படாமல் அரை குறையாக தூர்வாரப்பட்டு உள்ளது  ஆகவே உடனடியாக அசூர் வாய்க்காலை முழுமையாக முறையாக தூர்வார வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.