tamilnadu

புத்தூர் வாய்க்காலை தூர்வாரக் கோரிக்கை

 சீர்காழி, அக்.21-  புத்தூரில் பாசன கிளை வாய்க்காலில் இடையூறாக விழுந்து கிடக்கும் பெரிய மரத்தை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் புத்தூரில் பிரதான புதுமண்ணியாறு பாசன வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்காலாக பிரிந்து செல்லும் ஆயங்குடிபள்ளம் வாய்க்கால், அப்பகுதியில் உள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1500 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதியையும் வடிகால் வசதியையும் செய்து தருகிறது. தொடர்ந்து பல வருடங்களாக தூர்வாரப்படாமல் உள்ள இந்த வாய்க்காலில் பாசனத்திற்கு இதுவரை தண்ணீர் திறந்து விடவில்லை. தண்ணீர் திறந்து விட்டாலும் இந்த வாய்க்கால் வழியே தண்ணீர் செல்வது அரிதான ஒன்றாகும். வாய்க்கால் தூர்ந்தும் புதர்கள் மண்டிக் கிடப்பதுமே இதற்கு காரணமாகும். இந்நிலையில் புத்தூர் மதகடி அருகே ஆயங்குடிபள்ளம் வாய்க்காலில் சுமார் ரூ 50 ஆயிரத்திற்கும் மேல் மதிப்பிலான தூங்குமூஞ்சி மரம் விழுந்து 3 வருடத்திற்கும் மேலாகியும் இதுவரை அகற்ற வில்லை.  வாய்க்காலின் குறுக்கே வாய்க்காலை தூர்வார முடி யாதபடி வாய்க்காலின் குறுக்கே விழுந்து கிடக்கிறது. இது வரை அகற்றாத இந்த மரம் தொடர்ந்து கீழே விழுந்து கிடப்ப தால் எந்த பயனுமின்றி மக்கி வீணாகும் நிலை ஏற்படும். எனவே வாய்க்காலில் இடையூறாக விழுந்து கிடக்கும் மிகப்பெரிய தூங்குமூஞ்சி மரத்தை அகற்ற பொதுப்பணித் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவ சாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.