கேஸ் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவொற்றியூர் பாரத் நகர் ரவுண்டானா அருகே பகுதிச் செயலாளர் கதிர்வேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை, ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் ரூ.50 உயர்த்தப்படும் என ஒன்றிய அரசு அறு\\றிவித்தது. இதன் மூலம் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ.550 ஆகவும், மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.853 ஆகவும் உயர்கிறது. இந்த நிலையில் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவொற்றியூர் பாரத் நகர் ரவுண்டானா அருகே சிபிஎம் சார்பில் பகுதிச் செயலாளர் கதிர்வேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், நிர்வாகிகள் கே.ஆர்.முத்துசாமி, கே.கே.புஷ்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.