சென்னை,ஏப்.09- தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இந்த வார இறுதியில் வரும் தொடர் விடுமுறையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக ஏப்ரல் 9, 11, 12 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து மொத்தம் 1,680 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.
கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் 1,095 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.