தஞ்சாவூர், பிப்.11- தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியம் தலைமை வகித்து பேசி னார். பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி மறைந்த பேரா சிரியர் ந.அதியமான் பெயரிலான அறக் கட்டளையின் அமைப்பாளர் பேராசிரியர் சு.ராசவேலு வரவேற்றார். முன்னாள் பேரா சிரியர்கள் இராமசுந்தரம், கி.ரங்கன், முரளி தரன், குளத்தூரான், நீலகண்டன், ஷீலா ஆகி யோர் மறைந்த பேராசிரியர் அதியமான் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தமையை நினைவு கூர்ந்து பேசினர். பேரா ராஜவேலு மற்றும் பேரா ராஜன் ஆகியோர் அறக்கட்டளைக்கான தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கான, வரை வோலையையும், மேலும் பேராசிரியர் அதியமான் பொருளாளராக இருந்து செயல்படுத்திய தொல்லியல் கழகத்திற்கு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்த்த தனியாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்திற்கான வரைவோலையையும், துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியத்திடம் வழங்க அதனை தொல்லியல் கழகத்தின் செயலர் ராஜவேலு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதியமான் குடும்பத்தின் சார்பாக அவரது தந்தையார் நடராஜன் அதியமான் கல்வித்திறத்தைக் குறித்து பேசினார். நிறைவாக புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் க.ராஜன் நன்றி கூறினார்.