தஞ்சாவூர், மார்ச் 21- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை வழியாக தாம்பரம்- செங்கோட்டை இடையே, இரு மார்க்கத் திலும் வாரத்தில் 3 நாட்கள் அதிவிரைவு ரயில் சேவையை இயக்குவதற்கு தென்னக ரயில்வே முன்மொழிந்துள்ள தால் இதன் கால அட்டவணை விரை வில் வெளியிடப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது. பெங்களூரில் நடைபெற்ற ரயில்வே நேர அட்டவணை ஒருங்கிணைப்பு (ஐஆர்டிடிசி) கூட்டத்தில் தென்னக ரயில்வே தலைமை இயந்திர பொறி யாளர் ஆர்.செந்தில்குமார் அளித்துள்ள முன்மொழிவில் கூறியிருப்பதாவது, தாம்பரம் - செங்கோட்டை இடையே இரு மார்க்கத்திலும் அதிவிரைவு இரவு நேர ரயில் சேவை வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை ஆகிய 3 தினங்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப் புலியூர், மாயாவரம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக் கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்ற டையும். மறுமார்க்கத்தில் வாரந்தோறும் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய 3 தினங்கள் செங்கோட்டை ரயில் நிலை யத்திலிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் ரயில் நிலையத்தி ற்கு மறுநாள் காலை 7.35 மணிக்கு வந்தடையும் என அதில் கூறப்பட்டுள் ளது. எனவே, இதன் கால அட்டவணை தென்னக ரயில்வே சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது. திருவாரூர் - காரைக்குடி இடையே உள்ள தில்லைவிளாகம், அதிராம்பட்டி னம், பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய ரயில் நிலையங்கள் ‘பி’ கிரேடு தரத்தை பெற்றிருப்பதாலும், ரயில்வே துறைக்கு அதிக வருவாய் ஈட்டித்தரக் கூடிய பகுதி கள் என்பதாலும், இந்த வழித்தடத்தில் தாம்பரம் - செங்கோட்டை வரை செல்லும் அதிவிரைவு ரயில் இந்த ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலான ரயில் பயணிகள், பொதுமக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.