கும்பகோணம், ஆக.22- கும்பகோணம் ஸ்பார்க் தொழில் கல்வி பள்ளி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பங்குபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் ரோட்டரி சங்க தலை வர் பிரபாகர் தலைமை தாங்கினார். செயலாளர் நிசார் பாஷா, பொருளாளர் விஜய் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்பார்க் தொழில் கல்வி பள்ளி தலைவர் முனைவர் சந்தோஷ் வர்மன் வரவேற்றார். அன்பு மருத்துவமனை தலைவர் மற்றும் கும்பகோணம் தமிழ் சங்கத்தின் தலைவருமான அன்பழகன் எம்எல்ஏ நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார். முன்னதாக கும்பகோணம் பகுதி யில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ மாண வியர் 1500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பேச்சு, கட்டுரை நடனப்போட்டி மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இதில் சிறந்த படைப்புகள் மற்றும் பல்வேறு திறனை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசு வழங்கி சிறப்பித்தனர்.