திருவாரூர், மே 18 - தமிழக முதல்வரின் ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் திருவாரூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பயிற்சியானது, “வேளாண் இயந்திரங்கள் பராமரித்தல் மற்றும் பழுது நீக்கம்” என்ற தலைப்பில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள மேல்நிலைக் கல்வி, அரசு தொழிற்பயிற்சி கல்வி (ஐடிஐ) மற்றும் பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள், திருவாரூர் பவித்திரமாணிக்கம், வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர் (வே.பொ.து) வேளாண்மை கருவிகள் பணிமனை அலுவலகத்திற்கு நேரில் வந்து கடவுச்சீட்டு, புகைப்படம் - 1, ஆதார் கார்டு, கல்வி தகுதிச்சான்று மற்றும் வங்கி கணக்கு நகல் உள்ளிட்ட விபரங்களை வழங்கி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பயிற்சி குறித்த கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள செயற்பொறியாளர் (வே.பொ.), வேளாண்மை பொறியியல் துறை, திருவாரூர், உதவி செயற்பொறியாளர் (வே.பொ.), வேளாண்மை கருவிகள் பணிமனை, திருவாரூர், சி.அரவிந்தன், இளநிலைப் பொறியாளர் (வே.பொ.) – 9442870506, த.பத்மநாபன் - இளநிலைப் பொறியாளர் (வே.பொ.) – 8124815606 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன தெரிவித்துள்ளார்.