புதுக்கோட்டை, செப்.8 - வேளாண்மை - உழவர் நலத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம் பாட்டுக் கழகம் இணைந்து ஊரக இளை ஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ‘அங்கக வேளாண்மை’ என்ற தலைப்பில் ஒரு மாத கால இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளர்ந்து வரும் மக்கள் எண்ணிக்கை காரண மாக வேளாண் உற்பத்தியை நிலைப் படுத்துதல் மட்டுமின்றி, அதனை சீரான நிலையில் உயர்த்துதலும் தற்போதைய தேவையாக உள்ளது. அதிக ரசாயன இடுபொருட்கள் மூலம் வேளாண்மை யில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் தன்னிறைவு அடைந்தி ருக்கிறோம் என்பதை விஞ்ஞானிகள் உணர்த்துகின்றனர். அதிக பின்விளைவு கொண்ட ரசாயன வேளாண் முறையினை தவிர்த்து இயற்கை முறையில் ஆரோக் கியத்தை பாதுகாக்கக் கூடிய அங்கக வேளாண்மையை பின்பற்றுதல் வருங் கால சந்ததியினருக்கு நாம் செய்யும் மகத்தான சேவை. ஆகவே அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, புதுக் கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கூட்ட ரங்கில் அங்கக வேளாண்மை குறித்து 20 பேருக்கு இலவச பயிற்சி வழங்கப் படவுள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 முதல் 40 வயது உள்ள நபர்கள் பங்கேற்கலாம். பெண்கள், ஆதரவற்ற விதவை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு தகுதியின் அடிப்படையில் முன்னு ரிமை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் தங்களது 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி புத்தக நகல், குறைந்த பட்ச கல்வித் தகுதிக்கான 10 ஆம் வகுப்பு கல்விச் சான்றிதழ் ஆகிய ஆவ ணங்களுடன் செப்.20 ஆம் தேதிக்குள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலோ புதுக் கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலோ பதிவு செய்து, பயிற்சியில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.