தஞ்சாவூர், மே 23- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த ஏனாதிகரம்பை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருபவர் தமிழரசன் (52). ஊரடங்கு உத்தரவால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இத னால் 10 ஆம் வகுப்பு பொ துத்தேர்வு தள்ளி வைக்கப் பட்டது. இந்த நிலையில் வரு கிற ஜூன் 15-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, இப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுத உள்ள 25 மாணவர்களின் வீடுக ளுக்கே, சென்று அவர்களது பெற்றோர்களுடன் கலந்து பேசி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் உள்ளிட்டவை வழங்கி, அவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தே கங்களை தீர்த்தும், வீட்டி லேயே பாடங்களையும் நடத்தி வருகிறார்.
இதனால் மாணவர்களும் மகிழ்ச்சியு டன் தேர்வை எதிர் கொள்ள தயாராகி வருகின்றனர். இது குறித்து ஆசிரியர் தமிழரசன் கூறுகையில், எனது வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களின் வீட்டிற்கு சென்று, அவர்க ளுடைய செயல்பாடுகளை பெற்றோர்களுடன் கலந்து பேசி, மாணவர்கள் படிப்ப தற்கு ஊக்கம் அளிப்பது வழக்கம். அதன்படி, பொதுத் தேர்விற்கு தயாராகும் மாண வர்களை சந்தித்து, அவர்க ளுக்கு பாடங்களில் ஏற்பட்ட சந்தேகங்களை தீர்த்து வைத்து, அவர்களுக்கு தேர்வுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுத்தேன். இது போன்று கடந்த 10 ஆண்டாக செய்து வருகிறேன். இதனால் ஆசிரி யரான எனக்கும், மாணவர்க ளுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.