. கும்பகோணம், மார்ச் 10- ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவக்க கோரி அரசு போக்குவரத்து தொழிலாளர் கள் சார்பில் தமிழகம் முழுவதும் மண்டல அலுவல கங்கள் முன்பு காத்திருப்பு போராட்டங்கள் நடை பெற்றன. அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் தலைமை போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி னர். போராட்டத்திற்கு ஊழியர் சங்க தலைவர் முருகன் சிஐடியு தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநில சம்மேளன நிர்வாகி சந்திரசேகர் விளக்க உரை ஆற்றினார். கௌரவத் தலைவர் ஆர்.மனோ கரன், எச்எம்எஸ் தலைவர் முருகேசன், சம்மேளன துணைத்தலைவர் எம்.கண்ணன், பொதுச் செயலா ளர் ஜி.மணிமாறன், செயலாளர் குணசேரன், ஏஐடியுசி சம்மேளன மாநில துணைத்தலைவர் கோபிநாதன், சிஐடியு துணைச் செயலாளர் கோவிந்தராஜு, துணை பொது செயலாளர் வைத்தியநாதன், துணைத் தலைவர் திரு நாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டம் செய்தனர்
புதுக்கோட்டை
இதே போல் அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு தொமுச மண்டல பொ துச் செயலாளர் எம்.வேலுச்சாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு பொ துச் செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் டி.எம்.கணேசன், டிடிஎஸ்எப் பொதுச் செயலாளர் எச்.இராஜசேகர், ஏஏஎல்எப் பொதுச் செயலாளர் பொன்.நகாராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். போராட்டத்தை ஆதரித்து தொமுச மாவட்ட நிர்வாகிகள் கணபதி, ரெத்தினம், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் க.செல்வராஜ், கே.முகதலிஜின்னா, ஏ.ஸ்ரீதர், எம்.ஜியாவுதீன், ஏஐடியுசி வி.சிங்கமுத்து, விடுதலை சிறுத்தைகள் கலைமுரசு உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தில் சங்கங்களின் மண்ட லத் தலைவர்கள் ஏ.அடைக்கலம், கே.கார்த்திக்கே யன், பிஎல்.குழந்தைவேலு, டிஎஸ்ஆர்.வின்சென்ட் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.