தஞ்சாவூர், மார்ச் 1- தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் நாட்டாணிக்கோட்டை வடக்கு அரசு நடுநிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜேசிஐ அமைப்பு சார்பில் பரிசுகள் வழங்கப் பட்டன. விழாவிற்கு, ஜேசிஐ பேராவூரணி சென்ட்ரல் தலைவர் கே.சரபோஜி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கே.லதாஸ்வரி வரவேற்றார். ஜேசிஐ மண்டல அலுவலர் பி.விஜயராஜா, கீரமங்கலம் தலைவர் கலைக்கண்ணன், பேராவூரணி கிளைச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், துணைத் தலைவர் ஜெகன் கோகுல், இயக்குநர்கள் நடேச குகன், ராஜராஜன், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.