tamilnadu

கொரோனா விழிப்புணர்வு படைப்புகளை உருவாக்கும் மாணவர்களுக்கு பரிசு

புதுக்கோட்டை, மார்ச் 23- பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டில் இருக்கும் தருணத்தில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு குறித்த தங்களின் கவிதை, ஓவியங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தால் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 17-ஆம்தேதி முதல் 31 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறையின் போது சுற்றுலா செல்வதையோ, தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதையோ தவிர்த்திடவும், குழந்தைகள் அதிகம் ஒன்றி ணைந்து விளையாடுவதையும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.   இந்நிலையில், வீடுகளில் இருந்தபடி ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் தங்கள் நேரங்களை செலவிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாண வியர்கள் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்பு ணர்வு குறித்து கவிதை மற்றும் ஓவியங்கள் வரைந்து கீழ்க்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம். தேர்வு செய்யப் படும் சிறந்த கவிதை மற்றும் ஓவியங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.  1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் தங்களது படைப்புக்களை 98651 20738 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் தங்களது படைப்புக்களை 94434 88869 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் தங்களது படைப்புக்களை 73737 97250 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், அதேபோன்று கல்லூரி மாணவ, மாணவியர் தங்களது படைப்புக்களை 97863 82393 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு 22-ஆம் தேதி முதல் 31 வரை அனுப்பி வைக்கலாம்.