தஞ்சாவூர், ஜன.5- பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா நிகழ்வாக ‘‘பொன்னி நதி நாகரீகம்’’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான பாரம்பரிய பானை ஓவியப் போட்டியை கட்டிட எழிற்கலை துறை மற்றும் கலை கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையும் இணைந்து நடத்தின. இப்போட்டியில் 10 பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் பங்கேற்றனர். ஓவியப்போட்டியின் முக்கிய கருத்தாக, தமிழ்நாட்டு மக்களின் விவசாயம் சார்ந்த ஓவியங்கள் இடம்பெற்றன. முதல் பரிசை தஞ்சாவூர் லிட்டில் ஸ்காலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கே.என்.ஃபாசி யூசுப், எஸ்.சங்கரா, 2-ஆம் பரிசை தஞ்சாவூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவிகள் எஸ்.ஹரிணி, பி. ஜமுனா, 3-ஆம் பரிசை பாப்பாநாடு எம்.எம்.ஏ மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஐ. சூரியா, பி.கண்மணி ஆகியோர் பெற்ற னர். வெற்றி பெற்றவர்களுக்கு பல்கலை., துணைவேந்தர் பேரா. வேலுச்சாமி, கட்டி டக் எழிற்கலைத்துறை முதன்மையர் பேரா. சி.வி.சுப்பிரமணியன், துறைத்தலைவர் பேரா. ஏ.ஆர்.ரமேஷ் பாபு, கலை மற்றும் கலாச்சாரப் பாராம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் உறுப்பி னர்கள் விஜயலட்சுமி பாரதி, ஏ.வி.நடன சிகாமணி, ஆர்.ஜெயசீலன் ஆகியோர் பரிசு களை வழங்கினர்.