tamilnadu

img

பிளக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் 3 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்

தஞ்சாவூர், செப்.23- பொது இடங்களில் பிளக்ஸ் வைக்க தடை உத்தரவால் தொழில் பாதிக்கப் படுவதுடன் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இதற்கு ஆட்சியர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிட் டல் பிளக்ஸ் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட் டத்திற்கு ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தார். கூட்டத்தில் தஞ்சை மாநகர டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் சங்கத்தின் தலைவர் சுந்தர நாராயணன், கவுரவ தலைவர் விஜய குமார், செயலாளர் அங்குராஜா, பொரு ளாளர் ஆனந்த் ஆகியோர் தலைமை யிலும், மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் சங்கத்தினரும் கோரிக்கை மனு கொடுத்தனர்.  அதில் கூறியிருப்பதாவது:  பொது இடங்களில் பேனர் வைக் கக்கூடாது என்று உயர்நீதிமன்ற உத்த ரவால் கடந்த 10 நாட்களாக எங்கள் தொழில் பாதிப்பு அடைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் எந்திரங்கள் பழுதாகி விடும். இந்த தொழிலை நம்பி தஞ்சை மாவட்டம் முழுவதும் 300 பிளக்ஸ் பிரிண்டிங் அச்சகம் உள்ளது. அதில் உள்ள தொழிலாளர்கள் 3 ஆயி ரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிறு தொழில் என்பதால் கடன் பெற்று தொழில் நடத்தும் நிறுவனங்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ள னர். பணிபுரிபவர்களுக்கான ஊதியம், கடை வாடகை, மின்சார கட்டணம் ஆகி யவை செலுத்த முடியாமல் தவிக்கின்ற னர். இதே நிலை தொடர்ந்தால் எங்க ளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். எனவே எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணுமாக கேட்டுக்கொள்கி றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருச்சி
திருச்சி மாவட்ட பிளக்ஸ் உரிமை யாளர் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், மாவட்டம் முழு வதும் 90க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவன உரிமையாளர்கள் கடந்த 20 வருடங்களாக தங்கள் வாழ் வாதாரமாக கொண்டு இத்தொழிலை செய்து வருகின்றனர். ஒவ்வொரு பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனத்திலும் குறைந்தது 25 தொழிலாளர்கள் நேரடி யாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். தனி நபர்கள் செய்யும் தவறுகளுக்கு அல் லது விதிமீறல்களுக்கு பிளக்ஸ் பிரிண்டிங் நிறுவனங்கள் எவ்விதத்தி லும் நேரடி தொடர்புடையவை அல்ல. எனினும் அரசு மற்றும் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் விதி முறைகளை பின்பற்றி இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றோம். ஆகவே மாவட்ட ஆட்சியர் எங்க ளது வாழ்வாதாரத்தை காப்பாற்றும் விதமாக பிளக்ஸ் பிரிண்டிங் பதாகை கள் வைப்பதற்கு எளிமையாக அனு மதி பெற்றிடும் வகையில் ஆவன செய்து தருமாறு கேட்டுக்கொள்கி றோம் என மனுவில் தெரிவித்திருந்த னர். மனுவை ஆட்சியரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன், செயலா ளர் ராஜா காவேரிமணியன், பொருளா ளர் கண்ணன் ஆகியோர் வழங்கினர்.