தஞ்சாவூர். ஆக.2 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த வர் தீபராஜன்(38). இவர் மனைவி மாரி யம்மாள் (34)/ இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர் பட்டுக்கோட்டை கரிக்காடு வடக்குத் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலை யில் சனிக்கிழமை இரவு சுமார் 9 மணி அள வில் அலுவலக உதவியாளர் தீபராஜன் பட்டு க்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவ லக மாடியிலுள்ள, மீட்டிங் ஹாலில் மின்விசி றியில் கயிற்றால் தூக்கிட்டு தொங்கி யுள்ளார். இரவு அங்கு பணியிலிருந்த கிராம உதவி யாளர் முகுந்தன் எதார்த்தமாக மாடிக்குச் சென்று மின்விளக்கை அணைத்து விட்டு ஹாலை பூட்டிவிட்டு வரலாம் என்று சென்ற போது தீபராஜன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது குறித்து கிராம உதவியாளர் முகுந்தன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) மணிவேலன், வட்டாட்சியர் தர ணிகா ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரை ந்து வந்த பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவலர்கள் தீபராஜனின் உடலை கைப்பற்றி, உட ற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து இவரது மனைவி மாரியம்மாள் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் காவல்து றையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வரு கின்றனர். மேலும் தீபராஜன் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது கார ணம் இருக்கிறதா என விசாரணை நடத்தி வரு கின்றனர்.