தஞ்சாவூர் ஆக.25- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டார வளமையம் சார்பாக 0-18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வரும் 28-ம் தேதி அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, அன்னப்பிளவு, உதடு பிளவுகளுக்கான இலவச அறுவை சிகிச்சை பரிந்துரை, உதவி உபகரணங்கள் பெற பரிந்துரை செய்யப்பட உள்ளது. குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றுடன், 4 பாஸ்போர்ட் புகைப்படம் கொண்டு வர வேண்டும். மேலும் தலைமையாசிரியரிடம் ஒப்புதல் பெற்ற சான்று பெற வேண்டும் என வட்டார வளமைய மேற்பார்வையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.