தஞ்சாவூர், பிப்.12- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உடையநாடு - வீரியங்கோட்டை ராஜராஜன் பள்ளியில் கல்வியோடு, விளையாட்டு மற்றும் தற்காப்புக்கலை பயிற்சியும் அளிக்கப்ப டுகிறது. இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில அளவில் தற்காப்புக்கலை போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு பரிசு களையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளனர். இதுகுறித்து பள்ளித் தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் கூறுகையில், “எம் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பான கல்வி, ஒழுக்கத்துடன், விளையாட்டு மற்றும் தற்காப்புக்கலை பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். தற்காப்புக்கலை தலைமை பயிற்றுநர் மாஸ்டர் நீடான் சேக் அப்துல்லா தலை மையில், மாணவ, மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பம், ஜூடோ, கூடோ, குத்துச் சண்டை ஆகிய பயிற்சிகளை அளித்து வரு கின்றனர். வாரத்தில் இரண்டு நாட்கள் என, தலா 3 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர். திருச்சி, நாம க்கல், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மும்பை என பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளில், பங்கேற்று பல மாணவர்கள் பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளனர் என்றார். பின்தங்கிய கிராமப் பகுதியில் உள்ள ராஜராஜன் கல்வி நிறுவனம், படிப்போடு, மாணவர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளித்து வருகிறது.