தஞ்சாவூர், பிப்.26- தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்து 44 ஆயிரத்து 384 விவசாயிகளுக்கு, ரூ.305.782 கோடி பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என தஞ்சை ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். கடந்த 2018-19 ஆம் ஆண்டு கோடை பருவத்தில் நெல் பயிருக்கு 1750 விவசாயிகள், 4,250 ஏக்கருக்கு பயிர் காப்பீடு செய்திருந்தனர். அதில் 1,145 விவசாயிகளுக்கு 0.549 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள கோடை நெல், உளுந்து மற்றும் பச்சை பயிர் ஆகிய பயிர்க ளுக்கு காப்பீடு செய்திட பிப்ரவரி 29 கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இழப்பினை தவி ர்த்திட தவறாது சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு, பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.