தஞ்சாவூர், ஆக.11- கும்பகோணம் காய்கறி மார்க்கெட்டில் சுழற்சி முறையில் வியாபாராம் செய்ய அனு மதிக்க வேண்டும் என சில்லரை வியாபாரி கள் மாவட்ட ஆட்சியரை, திங்கட்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கி னர். கும்பகோணம் நேரு, அண்ணா காய்கறி மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்துக்கு சுமார் 150 பேர் வந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவை சந்தி த்து மனுவை வழங்கினர். அந்த மனுவில், “நாங்கள் 250 பேர் 20 ஆண்டுகளாக கும்பகோணம் காய்கறி மா ர்க்கெட்டில் சில்லரை வியாபாரம் செய்து வரு கிறோம். கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 30ஆம் தேதி முதல் மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. இதனால் கடந்த 5 மாதங்களாக வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து விட்டோம். அதே நேரத்தில், வெளிமாவட்ட, வெளி மாநிலங்களிலிருந்து வரும் காய்கறிகளை வியாபாரிகள் வளையப்பேட்டை புறவ ழிச்சாலையில் வைத்து மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர். சில்லரை வியாபாரிகள் நகரில் எங்கும் வியாபாரம் செய்ய முடிய வில்லை. நாங்கள் ஊரடங்கு காலத்தில் வாழ்க்கையை நகர்த்த உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கி பெரும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்களை காய்கறி மார்க்கெட்டில் வாரத்துக்கு 100 பேர் வீதம் வியாபாரம் செய்ய சுழற்சி முறையில் அனுமதிக்க வேண்டும்” என கூறியுள்ளனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைவில் நகராட்சி அதிகாரிக ளோடு கலந்தாலோசித்து முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.