tamilnadu

ரேசன் கடைகளில் இலவச பொருட்கள் நிறுத்தம்: வி.தொ.ச கண்டனம் ஆக.14 ரேசன் கடைகள் முன்பு போராட்டம் நடத்த முடிவு

தஞ்சாவூர், ஆக.2-  ரேசன் கடைகளில் கொரோனா கால நிவா ரணமாக, பொதுமக்களுக்கு அத்தியாவ சியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு  வந்த நிலையில், தற்போது நிறுத்தப்பட்டுள்ள தற்கு அஇவிதொச கண்டனம் தெரிவித்து ள்ளது. ஆக.14 மாவட்டம் முழுவதும் உள்ள  அனைத்து ரேசன் கடைகள் முன்பு மக்க ளைத் திரட்டி போராட்டம் நடத்துவது எனவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.  அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட நிர்வாகி கள் கூட்டம், தஞ்சை அலுவலகத்தில் நடை பெற்றது. மாநிலச் செயலாளர் எம்.சின்ன துரை, மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, மாவட்டத் தலைவர் ஆர்.வாசு மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், “ரேசன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் ஆகஸ்ட் 1 முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில், கடந்த மார்ச்  மாதம் முதல் ஜூலை வரை ரேசன் கடைகளில்  இலவசமாக பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 1 முதல் பொது மக்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என  அரசு அறிவித்துள்ளது.  இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. தமிழக அரசு ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கை நீட்டித்துள்ள நிலையில், ரேசனில் விலையில்லா பொருட்களை நிறு த்தியது மோசமான முடிவாகும். எனவே, ஊரடங்கு காலம் முடியும் வரை அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்க கோரி  ஆகஸ்ட் 14 ஆம் தேதி அனைத்து ரேசன் கடை கள் முன்பும் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது” என முடிவு செய்யப்பட்டுள்ளது.