tamilnadu

தூத்துக்குடியில் போலீசார் தாக்கியதில் மரணங்கள் குறித்து விசாரித்திடுக: காவல்நிலைய சித்ரவதை எதிர்ப்பு இயக்கம் போராட்டம் நடத்த முடிவு

தூத்துக்குடி,ஜூலை 9-  தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப் பட்டு, தாக்கப்பட்டு நிகழ்ந்துள்ள மரணங்கள் தொடர்பாக  உரிய விசாரணை நடத்தி காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலைய சித்ரவதை எதிர்ப்பு இயக்கம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு: தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலை யங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்பவர்கள் மீது அடித்து, துன்புறுத்தி, சித்ர வதை செய்வதன் காரணமாக சாத்தான் குளம் தந்தை, மகன் படுகொலைச் சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. இதை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய சித்ரவதை எதிர்ப்பு இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது.  இக்கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் தலைமையில் நடை பெற்றது.

இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், மதிமுக மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம், தமுமுக மாவட்ட செயலாளர் ஹசன், மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் சம்சுதீன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன், மதிமுக சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி, மகாராஜன், பொன்ராஜ், வீரபொன்துரை, சரவணப்பெருமாள், கே.ஏ.பி.குமார், மமக மாநகர செயலாளர் பிரவீன், தமுக மாநகர தலைவர் அலிஅக்பர், ஆகியோர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலை யத்தில் சித்ரவதை செய்து  மரணமடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அனை வரையும் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். சாத்தான்குளம் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காதது, நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டது. கோவில்பட்டி கிளை சிறைச் சாலையில் அனுமதித்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக காவல்துறையில் செயல்படும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தமிழகம் முழுவதும் நிரந்தரமாக  தடை செய்ய வேண்டும். ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு ரூ.20 லட்சம் போதுமானதல்ல, எனவே ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக் கப்பட்டு சிறுநீரகம் செயலிழந்த  காயல் பட்டினத்தை சேர்ந்த ஹபிப்முகமது, சாத்தான்குளம் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு தாக்குதல் காரணமாக மரணமடைந்த பேய்க்குளத்தை சேர்ந்த மகேந்திரன், எட்டயபுரம் காவல்துறையினரால் விசார ணைக்காக அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டு கணேசமூர்த்தி மரணமடைந் தது தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்தி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இழப்பீடு வழங்க வேண்டும்.  இச்சம்பவங்கள் தொடர்பாக போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.