tamilnadu

img

இலவச மருத்துவ முகாம்

தஞ்சாவூர் மாவட்டம் குப்பத்தேவன் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் எம்.ராமலிங்கம் மேற்பார்வையில் டாக்டர் ரேவதி தலைமையில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மு.கி.முத்து மாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், ஊராட்சி தலைவர் பாலமுருகன், ஒன்றியக்குழு உறுப்பினர் வி.சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.