tamilnadu

img

ஏவிசி கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி தன்னாட்சி பீகாக் விரிவாக்கப்பணி சார்பில் சித்தர்காடு கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு கல்லூரியின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பி.என். ரெத்தின குமார் தலைமை வகித்தார்.  செயலர் கி.கார்த்திகேயன், முதல்வர் நாகராஜன் மற்றும் ஏவிசி அறக்கட்டளை அறங்காவலர் ஜி. மகேஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது மருத்துவர் டாக்டர் ஆர். மாத்ருபூதேஸ்வரன்   150-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு மருத்துவ சேவை செய்தார். இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலான கிராம மக்கள் கலந்துகொண்டு இலவசமாக மருந்துகளையும் சிகிச்சைகளையும் பெற்று பயன் அடைந்தார்கள். மேலும் பீகாக் கிராம ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் மற்றும் கல்லூரி பீகாக் ஒருங்கி ணைப்பாளர்கள் டாக்டர் வி.ராஜேந்திரன் வி .பாலு மற்றும் டாக்டர் ஆர்.ஆறுமுகம் ஆகியோர் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவி மாணவர்களுடன் இணைந்து மருத்துவ உதவி செய்தனர். பீகாக் முதன்மை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்  டி .டி வெங்கடேசன் மற்றும் டாக்டர் ஏ.ஆரோக்கியராஜ் மருத்துவ முகாமிற்கு  ஏற்பாடுகளை செய்தனர்.