கோவை, ஆக. 5- கோவையில் மாதர் சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் கள் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கிய தலைவர் களில் ஒருவரும், சுதந்திரபோராட்ட வீராங்கனையுமான கேப்டன் லட்சுமி அவர்களின் நினைவு தினத்தை யொட்டி மாதர் சங்கத்தினர் பல்வேறு வடிவங்களில் மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றி யம், ஜடால்நாயுடு வீதியிலும் மற்றும் காரமடையிலும் மாதர் சங்கத்தின் சார் பில் இலவச பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.