திருச்சிராப்பள்ளி: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருச்சி காட்டூர் கமிட்டி சார்பில் ஞாயிறன்று இந்திராநகர் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டி நடைபெற்றது. விழாவிற்கு மாதர் சங்க காட்டூர் கமிட்டி தலைவர் கவிதா தலைமை வகித்தார். போட்டியை மாநகர் மாவட்ட செயலாளர் துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்திரா நகர் கிளை செயலாளர் உமா மகேஸ்வரி, நிர்வாகிகள் மீனா, ஜானகி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கேசிபாண்டியன், காட்டூர் பகுதிக்குழு உறுப்பினர் பாலு, தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.