tamilnadu

img

அடிப்படை வசதிகள் வழங்கக் கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம், பனங்கொட்டை எம்.ஜி.ஆர்.நகர் பகுதி மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரியும், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதி களை நிறைவேற்றக்கோரியும் அனைத்திந்திய  ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஈரோடு மாநகராட்சி முதல் மண்டல உதவி ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். முன்னதாக, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்  லலிதா, நகரச் செயலாளர் கொங்குநதி  ஆகியோர் தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.