tamilnadu

நாளை 1000 மையங்களில் மாதர் சங்கம் போராட்டம்

உணவு, வேலை கொடு; வன்முறைக்கு முடிவு கட்டு

சென்னை, மே 30- உணவு, வேலை கொடு, வன் முறைக்கு முடிவு கட்டக்கோரி ஜூன் 1 ஆம் தேதியன்று ஆயிரம் மையங்க ளில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு இயக்கம் நடைபெறு கிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநி லப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கொரோனா வைரஸ் தொற்று தாக் கத்தால் கடந்த  இரண்டு மாத காலத் திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால்  ஏப்ரல் மாதம் மட்டும்  இந்தியா முழுவதும் 12 கோடி பேர் வேலை இழந்துள்ள னர். எனவே ஏழை எளிய சாதாரண மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர்.  லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்க ளுக்கு சொந்த மாநிலத்திற்கு  சென்று கொண்டுள்ளனர். பசியின் கொடுமை யால் புலம்பெயரும் தொழிலாளர் களும், குழந்தைகளும் உயிரிழக்கும் அவலம் நேரிடுகின்றது.  இக்காலத்தில் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கு வதிலும்  புலம்பெயர் தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தை பாது காப்பதிலும் மத்திய, மாநில அரசுகள் படுதோல்வி அடைந்துள்ளன.

ரேசன் கடைகளில் அரசு அறி வித்த இலவச பொருட்கள் கூட முழு மையாக சென்றடையவில்லை .வைர ஸின் தாக்கம் அதிகமாக இருப்ப தால் ஜூன், ஜூலை மாதங்களிலாவது முழுமையான வேலை வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்குமா என்ற ஏக்கத்தோடு மக்கள் காத்துக்கிடக் கின்றனர்.  இத்தகைய சூழலில் அனை வருக்கும் வேலை வழங்கிடு, அனை வருக்கும் உணவு வழங்கிடு, தமிழ கத்தில் அதிகரித்து வரும் வன்முறை க்கு முடிவு கட்டு என்ற கோஷத்தை முன் வைத்து   தமிழகம் முழுவதிலும் ஆயிரம் மையங்களில் ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக கவனஈர்ப்பு இயக்கம் ஜூன் 1-ஆம் தேதி காலை 10 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற உள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்து புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். இத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவு படுத்திட வேண்டும்.அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் அனைவருக்கும் ரேசன் கடைகளில் இலவசமாக வழங்க வேண்டும். தமிழ கத்தில் அதிகரித்து வரும் வன்முறை யை  தடுக்க வேண்டும் என்ற கோஷங் களை முன்வைத்து தமிழகம் முழு வதும் அனைத்துக்கிளைகளும்  இயக் கத்தை சக்தியாக நடத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.